முகப்பு
தற்போதைய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் மணாலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 29 ஜூன், 2018 at 10:05 AM
பகிர்:

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் மணாலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 

இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதுதவிர ஆங்காங்கே நிகழும் நிலச்சரிவால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணாலி-லே நெடுஞ்சாலையில் மார்ஹி என்ற இடத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மிகப்பெரிய பாறைகள் பெயர்ந்து சாலையில் விழுந்ததால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 

Advertisement

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.