தற்போதைய செய்திகள்

காஷ்மீருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை

காஷ்மீரில் கனமழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 

ANI


ஸ்ரீநகர்: காஷ்மீரில் கனமழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநகர் துணை ஆணையர் சையத் அபித் ஷா தெரிவித்தார்.

கனமழை, நிலச்சரிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக பஹால்கம் பாதை வழியாக மேற்கொள்ளப்படும் அமர்நாத் யாத்திரை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதேபோல் மோசமான வானிலை காரணமாகவே பால்தல் சாலை வழியான யாத்திரையும் நேற்று வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. 

தென் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் சங்கம் அருகிலுள்ள ஜீலம் நதிக்கரையின் கொள்ளளவு அபாய எல்லையான 21 அடியைத் தாண்டியதால் அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகமான மழை மற்றும் மோசமான வானிலை காரணமாகவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராஜோரியில் உள்ள தர்ஹாலி ஆற்றில், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாசிவராத்திரி, வார இறுதிக்கு 1,360 சிறப்பு பேருந்துகள்

அதிவேக அரைசதம்..! டி20 உலகக் கோப்பையில் சாதனை படைத்த ஷனாகா!

கனடா பள்ளி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட திருநங்கை!! திடுக்கிடும் காரணங்கள்!

டி20 உலகக் கோப்பை: ஓமனுக்கு எதிராக 225 ரன்கள் குவித்த இலங்கை!

பொதுவேலை நிறுத்தம்: கோவை – கேரள பேருந்து சேவை முடக்கம்!

SCROLL FOR NEXT