முகப்பு
தற்போதைய செய்திகள்

உள்நோக்கத்துடன் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளது: வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி

உள்நோக்கத்துடன் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளது என்று கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

உள்நோக்கத்துடன் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளது என்று கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வாதம் புரிந்தார். 

ஐ.என்.எக்ஸ். ஊடகம் தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர். பின்னர் தில்லி பாட்டியாலா வளாகத்தில் உள்ள பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சுமீத் ஆனந்த் முன்பு கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். கார்த்தி சிதம்பரத்துக்கு அவரது வழக்குரைஞருடன் பேச 10 நிமிட நேரம் நீதிபதி அவகாசம் அளித்தார். தில்லி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது 'இதுவொரு அரசியல் பழிவாங்கும் செயலாகும்; இதை நான் நிரூபிப்பேன்' என்றார் கார்த்தி.

கார்த்தியை கைது செய்தது ஏன் என்று சி.பி.ஐ. விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்  சி.பி.ஐ. விசாரணைக்கு கார்த்தி ஒத்துழைப்பு அளித்தாகவும் அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி இன்று கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →