முகப்பு
தற்போதைய செய்திகள்

மறைந்த ஸ்ரீ ஜெயேந்திரர் உடல் இன்று நல்லடக்கம்

காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 82, உடல் நலக்குறைவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் நேற்று காலை 7.45 மணிக்கு சித்தியடைந்தார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்(82), உடல் நலக்குறைவால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் நேற்று காலை 7.45 மணிக்கு சித்தியடைந்தார். 

கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், அண்மைக்காலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் வேத மந்திரங்கள், அபிஷேக ஆராதனைகளுடன் ஸ்ரீ ஜயேந்திரரின் பிருந்தாவன பிரவேசம் இன்று நடைபெறும் என காஞ்சிபுரம் சங்கர மடம் தெரிவித்துள்ளது. ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நல்லடக்கம் செய்தவற்கான இறுதி சடங்குகள் துவங்கியுள்ளது.
 
'மகா பெரியவர்' அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான, சங்கர மடத்தின், பிருந்தாவனம் அருகிலேயே, ஸ்ரீ ஜெயேந்திரரும், இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →