தற்போதைய செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு ராஜதானி ரயிலில் சானிடரி நாப்கின் இயந்திரம் பொருத்தம்

DIN

மும்பை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டிலேயே முதன்முறையாக வியாழக்கிழமை மும்பையில் இருந்து தில்லி சென்ற ராஜதானி விரைவு ரயிலில் பெண்களுக்காக சானிடரி நாப்கின் வழங்கும் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

ரயிலில் நீண்ட தூரம் பயணிக்கும் பெண்கள் பயணிகளுக்கு பயன் அளிக்கும் விதமாக ராஜதானி விரைவு ரயிலில் ஒரு சுகாதாரத் துப்புரவு எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இவை சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற ரயில்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம் என்று மேற்கு ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் ரவிந்தர் பக்ர் தெரிவித்துள்ளார். 

இதற்கு பெண் பயணிகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. "இது மிகவும் பயனுள்ளது மற்றும் ரயில்வே நிர்வாகத்தால் நன்கு திட்டமிடப்பட்ட முடிவு ஆகும். நாங்கள் 5 ரூபாய் செலவில் ஒரு சுகாதாரத் துணியைப் பெற முடியும்" என்று பெண்களில் பயணிகள் ஒருவர் கூறினார். 

மேலும் நீண்ட தூரப் பயணங்களின் போது அவசரத்தில் முக்கியமான சானிட்டரி நாப்கின்களை எடுத்துச் செல்ல மறந்துவிடும் பெண்களுக்கு இத்திட்டம் பயன்படும் என்று பெண் பயணிகள் தெரிவித்தனர். சானிட்டரி நாப்கின் பயன்பாடு குறித்த சங்கடமும் கூச்சமும் தேவையில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT