தற்போதைய செய்திகள்

பீமா-கோரேகாவ் கலவரம்: குற்ற வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற மாநில அரசு முடிவு

DIN

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ளது சனஸ்வாடி கிராமம். கடந்த 1ம் தேதியன்று இங்கு நடந்த பீமா-கோரேகாவ் போர் வெற்றி விழாவின் நூறாவது ஆண்டு கொண்டாட்டத்தின் போது சாதிக்கலவரம் வெடித்தது. 

இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதான குற்ற வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற முடிவெடுத்துள்ளதாக மகாராஷ்டிர முதலவர் தேவேந்திர பட்னாவிஸ் சட்டப் பேரவையில் இன்று தெரிவித்தார். 

1818-ம் ஆண்டு நடந்த போரின் நினைவாக கோரேகாவ் பீமா பகுதியில் தலித் மக்கள் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு 200வது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் அங்கு வந்த தலித் சமூகத்திற்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இது பயங்கர மோதலாக மாறியது. இந்த மோதலின் போது ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார். மேலும் பலர் காயம் அடைந்தார்கள். 

இதனால் அந்த பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போலீஸ் வாகனம் உட்பட ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரம் பல பகுதிகளுக்கு பரவியது. இதனால் சில இடங்களில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் போராட்டம் காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை கலைத்து நிலைமைய கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கலவரம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மகாராஷ்டிர முதலவர் தேவேந்திர பட்னாவிஸ் சட்டப் பேரவையில் பேசும் போது கலவரம் தொடர்பான குற்றவழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT