முகப்பு
தற்போதைய செய்திகள்

அனைத்து ரயில்களிலும் விரைவில் சிசிடிவி, வைஃபை வசதி: பியூஷ்கோயல் திட்டவட்டம்

விரைவில் அனைத்து ரயில்பெட்டிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும், வைஃபை வசதி செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

Updated On : 18 மார்ச், 2018 at 9:35 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:00 PM

லக்னோ: விரைவில் அனைத்து ரயில்பெட்டிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும், வைஃபை வசதி செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களையும் சுத்தமானதாகவும், பாதுகாப்பாகவும், அனைத்து வசதிகளும் நிறைந்தவையாக மாற்ற அரசு தீர்மானித்துள்ளது. 

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரைவில் அனைத்து ரயில்கள், ரயில்பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் வைஃபை இணையத்தள வசதி செய்யப்படும் என்று தெரிவித்தார். 

Advertisement

மேலும் அதிக செலவு காரணமாக தேஜாஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள அனைத்து எல்சிடி திரைகளையும் அகற்ற ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரேபரேலி ரயில் பெட்டித் தொழிற்சாலையை உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையாக மாற்றுவதற்கு ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.