தற்போதைய செய்திகள்

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு: உயர்நீதிமன்றம் 

DIN

சென்னை: புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது. 

யூனியன் பிரதேச அரசுகளுக்கான சட்டத்தின்படி, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டு, அவர்களுக்குப் பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். விதிகளின்படி தகுதி வாய்ந்த நபரால் பதவிப்பிரமாணம் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி, இந்த நியமனம் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

மேலும், ஆளுநரின் இந்த நியமனத்துக்கு தடை விதிக்க கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கு, ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவினை ரத்து செய்யக் கோரி தனலெட்சுமி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு மற்றும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க கோரி நியமன எம்.எல்.ஏக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு என 3 வழக்குகளும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பை வழங்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT