தற்போதைய செய்திகள்

பிகார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 பேர் பரிதாப பலி

பிகார் மாநிலம் நாலந்தா பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் சிக்கிய 5 பேர் உயிரிழந்தனர்.

DIN

பாட்னா: பிகார் மாநிலம் நாலந்தா பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் சிக்கிய 5 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிகார் மாநிலம் நாலந்தாவில் உள்ள ஜலால்பூர் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. 

இதையடுத்து தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்து சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வெடி விபத்தில் அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதங்கள், உயிரிழப்புகள் குறிந்த எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT