ஜகர்தா: இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டனிம்பார் தீவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புவியியல் அமைப்பில் அடிக்கடி நிலநடுக்கங்களை எதிர்கொள்ளும் ‘நெருப்பு வளையம்’ எனப்படும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் இரண்டு முதல் மூன்று விநாடிகள் மக்களால் உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் உள்ள சாம்லகி பகுதியில் கடல் பகுதியை ஒட்டியுள்ள வடமேற்கே சுமார் 171 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம், பொருள்கள் சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.