தற்போதைய செய்திகள்

கர்நாடகாவில் பாஜக பிரமுகரின் அடுக்கு மாடி குடியிருப்பில் கட்டுக்கட்டாக போலி வாக்காளர் அட்டை பறிமுதல்

கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவை தொகுதியில்

IANS

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பாஜக பிரமுகரின் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் கட்டுக்கட்டாக போலி வாக்காளர் அட்டையை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  

பெங்களூரூவின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்குட்பட்ட ஜலஹள்ளியில் உள்ள பாஜக பிரமுகர் ஒருவரின் எஸ்எல்வி பார்க் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் போலி வாக்காளர் அடையாள அட்டை அச்சடிப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. 

இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் ஒரு குழுவாக சென்று அங்கு சோதனை மேற்கொண்டதில் 9,746 போலி வாக்காளர் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள் பிரிண்டர்கள் மற்றும் 5 லேப்டாப்களை கைப்பற்றினர். 

இதை தொடர்ந்து ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி (ஆர்.ஆர்.நகர்) தேர்தலை ரத்து செய்யும் படி காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளடதுடன், இந்த அடுக்குமாடி குடியிருப்பு உள்ளூர் பாஜக தலைவருக்கு சொந்தமானது. இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எதிராக உயர்மட்ட விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக தலைவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாஜகவினர் நாடகம் நடத்துவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக கர்நாடகா தலைமை தேர்தல் ஆணையர் சஞ்சீவ் குமார் கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் போலி அல்ல உண்மையானது தான் எனினும் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கூறிய புகாரில் உண்மையில்லை என பாஜக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது. இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் முனி ரத்னாநாயுடு தோல்வி பயத்தில் பாஜக மீது அபாண்டமாக குற்றம்சாட்டியுள்ளார் என்றனர்.

ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கு தேர்தலை ரத்து செய்யலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷம் குடித்து முதியவா் பலி

கரூா் சம்பவம்: மிரட்டலுக்கு பயந்து செல்வராஜ் பொய் சொல்கிறாா்! உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த வழக்குரைஞா் பேட்டி

சிஎஸ்ஐ பள்ளிகளுக்கு தலா ரூ. 1 லட்சத்தில் டிஜிட்டல் பேனல்: சென்னை பேராயா் அறிவிப்பு!

முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கான தோ்வு: பெரம்பலூரில் 4,280 போ் பங்கேற்பு

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT