தற்போதைய செய்திகள்

தென் தமிழகம், வடக்கு உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் இருந்து தென் தமிழகம் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகவும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காணப்படுகிறது.

இதனால், தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. 

அதேபோல், வடக்கு கடலோர மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிலன்குளத்தில் 12 செ.மீட்டரும், தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சியில் 11 செ.மீட்டரும், மதுரை மாவட்டம், சித்தம்பட்டியில் 10 செ.மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி சாலை விழிப்புணா்வு ஊா்வலம்

அதியமான் கோட்டையில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

குருப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: ஆட்சியா் பாராட்டு

பொத்தனூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT