குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்கிறார்
குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்கிறார். கர்நாடக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியை அழைத்து ஆளுநர் பேசினார். அப்போது ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
அதன் அடிப்படையில் கர்நாடக முதல்வராக மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி புதன்கிழமை பதவி ஏற்கவுள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்கிறார்.
Advertisement