தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே

DIN

நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இரண்டு நாள் பயணமாக இன்று (மே 24-ம் தேதி) காலை இந்தியா வந்தார். அவருடன் நெதர்லாந்து துணை பிரதமர் மற்றும் சில முக்கிய அமைச்சர்களும் வந்துள்ளனர். 

இந்தியா வந்த மார்க் ருட்டே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

இதையடுத்து, மார்க் ருட்டே தில்லியில் நடைபெற உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் 130 நாடுகளை சேர்ந்த 231 தொழிலதிபர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த பயணத்தின் போது நெதர்லாந்து பிரதமர் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு செல்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. 


மார்க் ருட்டே இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும் முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

SCROLL FOR NEXT