தற்போதைய செய்திகள்

நெய்வேலியில் பதற்றம்: 25 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி; 5 பேர் கவலைக்கிடம்

DIN

நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியடில் ஈடுபட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) பலர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.  இவர்களில் சிலரை வேறு சுரங்கத்திற்கு பணி மாற்றம் செய்ததை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு அதே இடத்தில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேராடி வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று சுரங்கம் 1ஏ முன்பு மறியலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சுமார் 25 தொழிலாளர்கள் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனிடியாக மீட்கப்பட்டு என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிகிச்சை பெற்று வருவர்களில் குமார், ஜெயராஜ், பாஸ்கர், ஜோசப் மற்றும் வினாயகமூர்த்தி ஆகிய 5 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் தொழிலாளர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தங்களது நிலத்தினை என்.எல்.சி.க்கு வழங்கியதற்காக ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களே பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT