தற்போதைய செய்திகள்

சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

DIN

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைய உள்ளதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தமிழக கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. 

வங்கக்கடலில் உருவாகி உள்ள தாழ்வு பகுதியினால் சென்னை, அம்பத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், வடபழனி, கோயம்பேடு, மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவான்மியூர், மீனம்பாக்கம் தாம்பரம், பெருங்குடிஉள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT