தற்போதைய செய்திகள்

அக்டோபர் 2: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.87.24; டீசல் ரூ.79.64

தினந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை

DIN


தினந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. 

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.91.20 செவ்வாய்கிழமை தாண்டியது. சென்னையில் ரூ.87.24-க்கு விற்பனையானது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் செவ்வாய்கிழமை லிட்டருக்கு 19 காசுகள் உயர்த்தின. இதேபோல், டீசல் விலையையும் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்தன.

இந்த புதிய விலை உயர்வின்படி, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.85 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.75.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

வர்த்தக தலைநகரான மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.91.20க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.89 விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.87.24 க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.79.64 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் இறக்குமதியில் 3ஆவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருவதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

கரூர் பலி: மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மீது எம்.பி.க்கள் குழு உரிமை மீறல் தீர்மானம்!

உ.பி.: 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே பலியான 75 வயது முதியவர்!

SCROLL FOR NEXT