முகப்பு
தற்போதைய செய்திகள்

பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோகரி மீது பாலியல் புகார்

பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோகரி மீதும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோகரி மீதும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது விவாதபொருளாக மாறியுள்ள மீடூ விவகாரம் பாலிவுட் முதல் கோலிவுட் திரையுலகையும் தாண்டி, தற்போது விளையாட்டு துறையிலும் புயலை கிளப்பி சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரணதுங்கா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆகியோர் மீது பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோகரி மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் டுவிட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளார். 

கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ தொலைக்காட்சியில் ராகுல் ஜோகரி தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது, தமக்கு வேலை தருவதாகக் கூறி, பாலியல் ரீதியாக தம்மை துன்புறுத்த முயன்றதாக, பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண் பத்திரிகையாளர் கூறியுள்ளார். 

அவர் இ-மெயில் மூலம் அனுப்பிய தகவலை, பிரபல பத்திரிகையாளர் ஹர்னித் கவுர் என்ற பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →