தற்போதைய செய்திகள்

இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

DIN


ராமேஸ்வரம்: இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுபத்தி உள்ளது. 

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 நாட்களுக்கு பின்னர் இன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் விரித்திருந்த 10-க்கும் மேற்பட்ட மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியும், அவர்களை துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர். 

இதனால் துண்டிக்கப்பட்ட வலைகளுடன் மீன்பிடிக்காமல் பதற்றத்துடன் கரை திரும்பிய மீனவர்கள், இந்திய எல்லையில்கூட தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டினர். 

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT