ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி: அமைச்சர் வீரமணி தாக்கு
அதிமுக ஆட்சி குறித்து குறைகூற எதுவும் இல்லாததால், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து
வேலூர்: அதிமுக ஆட்சி குறித்து குறைகூற எதுவும் இல்லாததால், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம் மாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அதிமுக 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வீரமணி, கடந்த காலத்தில் ஊழல் பிரச்னையில் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி தான்.
அதிமுக ஆட்சி குறித்து குறைகூற எதுவும் இல்லாததால், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மு.க. ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக அமைச்சர் வீரமணி குற்றம் சாட்டினார்.
Advertisement
ஜோலார்பேட்டையில் புதிதாக கட்டப்படும் ரயில்வே மேம்பாலப் பணிக்கு கூடுதலாக ரூ. 10 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.