டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும், அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக
சென்னை: தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும், அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில், தனியார் அமைப்பு சார்பில் உலக நோய் தடுப்பு பாதுகாப்பு தின கருத்தரங்கில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெங்களூரு, சித்தூரை தொடர்ந்து தமிழகத்திலும் பரவலாக பன்றி காய்ச்சல் பரவி வருவதாகவும், தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தொடர் கண்காணிப்பில் உள்ளது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், நாளொன்றுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறியோடு 8-20 பேரும், டெங்கு காய்ச்சல் அறிகுறியோடு 30-50 பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
Advertisement