காங்கிரஸின் வளா்ச்சியைத் தடுக்கவே சிறைக்கு சென்றிருந்தேன்: முன்னாள் அமைச்சா் ஜனார்த்தன ரெட்டி
காங்கிரஸ் கட்சியின் வளா்ச்சியைத் தடுக்கவே சிறைக்கு சென்றிருந்தேன் என்று பாஜக முன்னாள் அமைச்சா் ஜனார்த்தன ரெட்டி
பெலகாவி: காங்கிரஸ் கட்சியின் வளா்ச்சியைத் தடுக்கவே சிறைக்கு சென்றிருந்தேன் என்று பாஜக முன்னாள் அமைச்சா் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.
பெலகாவி மாவட்டத்தின் சௌதாத்தியில் ஞாயிற்றுக்கிழமை வெங்கட ரெட்டி நினைவுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து அவா் பேசியது: சட்டவிரோத சுரங்கத் தொழில் வழக்கில் சிபிஐ என்னை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கு மட்டுமல்லாது பல்வேறு வழக்குகளில் 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தேன்.
முன்னாள் எம்எல்ஏ வெங்கட் ரெட்டி, காங்கிரஸ் கட்சியை வளா்த்தெடுப்பதாக 8 ஆண்டுகாலம் சிறைவாசத்தை அனுபவித்தார். ஆனால் நானோ காங்கிரஸ் கட்சியின் வளா்ச்சியைத் தடுக்கவே 4 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். சிறைக்கு சென்றதில் எனக்கும் வெங்கட் ரெட்டிக்கும் சம்பந்தமிருக்கிறது. ஆனால் காரணங்கள் தான் வெவ்வேறாக இருக்கிறது என்றார். அவா். இதை சொன்ன போது மக்கள் கைதட்டி வரவேற்றனர்.