முகப்பு
தற்போதைய செய்திகள்

2019 மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்: அமித்ஷா

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை விட 2019 தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றும் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கட்சியின்

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:


புதுதில்லி:  2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை விட 2019 தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றும் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தில்லியில் இன்று சனிக்கிழமை தில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் நுற்றுக்கணக்கான முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

அமித் ஷாவின் பதவிக்காலம் 2019 ஜனவரியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்வதை ஒத்திவைத்திவிட்டு, அவரது தலைமையிலேயே மக்களவைத் தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக செயற்குழு கூட்டத்தில் சிறப்பு ஒப்புதல் பெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பாஜக விதிப்படி, கட்சி உறுப்பினர்கள் யார்வேண்டுமானாலும், தலைவராக முடியும். அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் என தலா இருமுறை பாஜக தலைவராக நீடிக்கலாம். 

தேசிய செயற்குழு கூட்டத்தை அமித் ஷா குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். பாஜக மூத்த தலைவர் வாஜ்பாயின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசிய செயற்குழு கூட்டம் என்பதால், முதலில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

பாஜகவின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டத்தின் தொடக்க உரையில், கட்சித் தலைவர் அமித் ஷா பேசுகையில், அடுத்த ஆண்டு (2019) மக்களவைத் தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி முந்தைய தேர்தலை விட (2014) அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார்.  

2019 மக்களவைத் தேர்தல் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் வரும் 10-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளதால், அதனை சமாளிப்பது குறித்தும், ரூபாயின் மதிப்பு சரிவு, அண்மையில் மத்திய அரசு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்னைகளை வைத்து எதிர்க்கட்சிகள், பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனை மீறி சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, நாளை கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். 

தலித் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே அம்பேத்கர் சர்வதேச மையத்தை பாஜக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →