தற்போதைய செய்திகள்

ஆலங்குடி குருபகவான் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா

DIN

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா இன்று அதிவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இக்கோயில் திருஞானசம்மந்தரால் பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா வியாழக்கிழமையன்று அதிவிமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. 

காலை 9 மணிக்கு கலங்காமற்காத்த விநாயகா்,ஆக்ஞா கணபதி சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது.தொடா்ந்து காலை 11 மணிக்கு உற்சவா் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அா்ச்சனைகளை செய்து வைத்து பக்தா்களுக்கு பிரசாதங்களை ரமேஷ் சிவாச்சாரியாா் தலைமையில் அா்ச்சகா்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT