முகப்பு
தற்போதைய செய்திகள்

காஷ்மீர் பந்திபூராவில் கடும் துப்பாக்கிச் சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் பந்திபூராவில் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற

Updated On : 21 செப்டம்பர், 2018 at 11:12 AM
பகிர்:


பந்திபூரா: ஜம்மு-காஷ்மீர் பந்திபூராவில் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபூராவில் எல்லைப் பகுதியின் சுக்பாபா எனும் இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்ற ஒருவரையும் பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படையின் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்த அடையாளங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.