தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை காணவில்லை: எச்.ராஜா

DIN


பொறையாறு: நாகை மாவட்டம் திருக்கடையூா் ஸ்ரீஅபிராமி சமேத அமிர்தகடேஸ்வா் கோயிலில் நடைபெற்ற சகோதரியின் சஷ்டியப்தபூா்த்தி விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த பாஜக தேசிய செயலாளா் எச்.ராஜா, தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை காணவில்லை என தெரிவித்தார். 

திருக்கடையூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு ஆகம விதிகளை காரணம் காட்டி இந்து சமய அறநிலையத்துறை அனுமதி மறுத்துள்ளது. ஆகம விதிகள் குறித்து பேச அறநிலையத்துறைக்கு எந்த உரிமையும் கிடையாது. 

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி கோயில் நிர்வாகம் நடை பெறவில்லை. கண்டனத்திற்கு உரியது. இந்து சமய அறநிலையத்துறை ஆவனங்களின் படி தமிழகத்தில் உள்ள 38,646 கோயில்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை கானவில்லை. அவற்றை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் தங்களது வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிலை உள்ளது. இது குறித்து முதல்வா் அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. என்மீது புகார் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கு பதியப்படவில்லை. தனிப்படை அமைக்கப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. 

சிலை, திருட்டு, ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டவா்கள் அறநிலையத்துறை அதிகாரிகளாக உள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொண் மாணிக்கவேலின் பணி பாராட்டத்தக்க வகையில் உள்ளது. தமிழக அரசு அவரக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். 

எனக்கு எதிராக அறநிலையத்துறை அதிகாரிகள் போராடுவது குறித்து எனக்கு எவ்வித அச்சமும் இல்லை. மாறாக எனது கருத்துக்கள் மக்கள் மத்தியில் சென்றடைவதற்கு அது உதவும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT