தற்போதைய செய்திகள்

மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்: முதல்வர் பழனிசாமி பேட்டி

DIN


திருப்பதி: உலக நன்மை, மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன் என சாமி தரிசனம் செய்த பின் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னையில் இருந்து குடும்பத்துடன் கார் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றார். அங்கு இரவு தங்கிய முதல்வர், இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற பூஜையில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ உலக நன்மை, மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்” என்றார். 

இதேபோன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து இன்று காலை குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். 

அப்போது தமிழக முதல்வர் பழனிசாமியும் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடும் சந்தித்து பேசிக்கொண்டனர். இருவரும் சாமி தரிசனத்திற்காக வந்தோம் என வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT