தற்போதைய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்-பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்பு படையினர்-பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

ANI


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்பு படையினர்-பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகரில் இருந்து 58 கி.மீட்டர் தொலைவில் உள்ள அனந்தநாக் மாவட்டம் துரு ஷகாபாத், பட்காம் பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்த வருகின்றனர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச்சண்டையில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். பயங்கரவாதிகள் தரப்பில் ஒருவனும் சுட்டுக்கொல்லப்பட்டான். 

அதேபோன்று, பட்காம் மாவட்டம் சாடூரா பகுதியில் பாதுகாப்பு படையினர்-பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இரண்டு பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒரு பயங்கரவாதியை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூட்டை அடுத்து இணையதள சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

SCROLL FOR NEXT