தற்போதைய செய்திகள்

வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வர வேண்டாம்: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வர வேண்டாம்: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. 

DIN


புதுதில்லி: வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்கு வர வேண்டாம்: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மாநில உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அமர்நாத் யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு காஷ்மீரை விட்டு விரைவில் வெளியேற வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியது.

 அதற்கு முன், ஜம்மு-காஷ்மீருக்கு கூடுதலாக 10,000 ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. ஏற்கெனவே, அந்த மாநிலத்தில் அதிக அளவில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால், கூடுதலாக ராணுவம் குவிக்கப்பட்டதால் பல்வேறு யூகங்கள் எழுந்தன.

இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜம்மு-காஷ்மீரில் இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வருவதால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வருவதால், காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளூர் பத்திரிகையாளர்களைத் தவிர வெளியில் இருந்து வரும் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்குள் வருவதை தவிரிக்கும் படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுத்தி உள்ளது.

இதனிடையே, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, காஷ்மீர் மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டிகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

SCROLL FOR NEXT