தற்போதைய செய்திகள்

வேலூர் கோட்டையை கைப்பற்றுமா திமுக? - தொடர்ந்து அதிமுக முன்னிலை  

DIN


மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வேலூர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள்  இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறன்றன. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் இரண்டாம் இடம் வகித்து வருகிறார்.  

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5 ஆம் தேதி நடந்தது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலின்போது, தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,553 வாக்குச்சாவடிகளில், தொகுதியில் மொத்தமுள்ள 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்களில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 352 பேர் தங்களது வாக்கை பதிவு செய்திருந்தனர். மேலும், ராணுவத்தில் பணியாற்றும் இந்தத் தொகுதியைச் சேர்ந்த 6,088 பேருக்கு மின்னணு தபால் வாக்குகளும், 1,026 போலீஸாருக்கு தபால் வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் ஏ.சி. சண்முகம் முன்னிலையில் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து எண்ணப்பட்டு வந்த முதல் சுற்று வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 21,660, திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் - 21,177, நாம் தமிழர் வேட்பாளர் தீபலட்சுமி - 400 வாக்குகள் பெற்றுள்ளன.

முதல் சுற்றுக்கள் முடிவில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 483 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். 

தற்போது இரண்டாம் சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிமுக  கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 57,511 வாக்குகளும், திமுக வேட்பாளரக் கதிர்ஆனந்த் 54,844 வாக்குகள் பெற்றுள்ளார். 2,667 வாக்குகள் வித்தியாசத்தில் சண்முகம் முன்னிலையில் இருந்து வருகிறார். 

வேலூர் கோட்டையை கைப்பற்றப் போவது திமுகவா, அதிமுகவா என்பது 12 மணியளவில் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT