தற்போதைய செய்திகள்

ரூ.18 லட்சம் நிதி முறைகேடு புகார்: ஆவின் பொது மேலாளர் பணியிடை நீக்கம்

DIN

ரூ.18 லட்சம்  நிதி முறைகேடு புகாரில் சிக்கிய திண்டுக்கல் ஆவின் பொதுமேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

திண்டுக்கல் மாவட்ட ஆவின் பொதுமேலாளராக முகமது பரூக் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது ஆவின் பாலகங்களை தனியாருக்கு முறைகேடாக விற்பனை செய்ததாகவும், விவசாயிகளுக்கு பாலுக்கான பணத்தை வழங்காமலும், ஆவின் தலைவருக்கு ஏற்கெனவே கார் இருக்கும் நிலையில், புதிதாக சொகுசு கார் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் பொதுமேலாளர் முகமது பரூக் மீது புகார் எழுந்தது. 

இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் ரூ.18 லட்சம் முறைகேடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பொதுமேலாளர் முகமது பரூக்கை பணியிடை நீக்கம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த முறைகேடு தொடர்பாக மேலாளர் தினகரன் பாண்டியன், விற்பனை பிரிவு மேலாளர் வெங்கடேஷன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT