தற்போதைய செய்திகள்

தேர்தல் நடத்தை விதியை மீறி காமராஜர் விழா கொண்டாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

DIN


வாணியம்பாடியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அரசுப் பள்ளியில் கட்சிப் பிரமுகர்களை அழைத்து விழா கொண்டாடிய தலைமையாசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பெரியபேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள், பள்ளி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டனர்.

தற்போது வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கட்சிப் பிரமுகர்களை அழைத்து விழா நடத்தியது விதி மீறிய செயல். இதையறிந்த நாட்டறம்பள்ளி வட்டாரக் கல்வி அலுவலர் சுரேஷ் தலைமையில் அலுவலர்கள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்தனர். 

பின்னர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் சுரேஷ்  புகார் அளித்தார்.

இந்நிலையில், தேர்தல் விதிகளை மீறி பள்ளியில் கட்சிப் பிரமுகர்களை அழைத்து விழா நடத்திய  தலைமையாசிரியை பரிமளாவை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் உத்தரவிட்டுபள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT