தற்போதைய செய்திகள்

கர்நாடகாவில் கனமழை: உடுப்பி மற்றும் குடகு மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை

கர்நாடகாவில் கனமழை காரணமாக உடுப்பி மற்றும் குடகு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  உடுப்பியில் பள்ளி மற்றும்

DIN


கர்நாடகாவில் கனமழை காரணமாக உடுப்பி மற்றும் குடகு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  உடுப்பியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாள்களாக தென் மேற்கு பருவ மழை கடலோர கர்நாடகத்தில் தீவிரமாகியுள்ளது. தென் கன்னடம், உடுப்பி, குடகு, வட கன்னடம், ஹாவேரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்துவருகிறது. கேரளமாநிலத்தை ஒட்டியுள்ள தென் குடகு மாவட்டத்தில் வழக்கத்தைவிட கன மழை பெய்துவருவதால், அந்த மாவட்டத்தின் மடிக்கேரி, விராஜ்பேட், பாகமண்டலா பகுதிகளில் சாலைகள், குளங்கள், ஏரிகள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது.

 தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். ஒருசில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் மண் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 ஜூலை 23 முதல் 27-ஆம் தேதி வரை குடகு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், உடுப்பி மற்றும் குடகு மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை(ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. உடுப்பியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

குடகு மாவட்டத்தில் வழக்கத்தைவிட நல்ல கனமழை பெய்துவருவதால் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு

தில்லியில் போலி பற்பசை தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: இருவா் கைது

போா்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் பணி: அதிமுகவுக்கு அமைச்சா் சக்கரபாணி பதில்

மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு - அக். 22-இல் குடியரசுத் தலைவா் தரிசனம்

மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

SCROLL FOR NEXT