முகப்பு
தற்போதைய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் ராமலிங்க ரெட்டியுடன் குமாரசாமி அவசர ஆலோசனை

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் ராமலிங்க ரெட்டியுடன் கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.  

Updated On : 25 ஜூலை, 2019 at 12:51 PM
பகிர்:


பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சியின் ராமலிங்க ரெட்டியுடன் கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 

கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த, மாநில பாஜக தலைவர்கள் குழு தில்லி சென்றுள்ளனர். 

இந்நிலையில், பாஜக ஆட்சியமைக்க தாமதம் செய்து வரும் நிலையில் முதல்வர் குமாரசாமி காங்கிரஸ் தலைவர் ராமலிங்க ரெட்டியுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சவுமியா ரெட்டியும் கலந்து கொண்டார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.