தற்போதைய செய்திகள்

துரைமுருகனின் மகன் வெற்றிபெறக்கூடாது என உதயநிதி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்: அமைச்சர் ஜெயகுமார்

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த்

DIN


வாணியம்பாடி: வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் வெற்றிபெறக்கூடாது என உதயநிதி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

வாணியம்பாடியில் இன்று அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், முத்தலாக் தடை சட்ட மசோதா மூலம் அனைத்து பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதே இலக்கு. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடுதான் இப்போதும் உள்ளது என்றார்.

மேலும், வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக எவ்வளவு பணம் செலவு செய்தாலும், அதிமுக தான் வெற்றி பெறும். திமுகவில் உட்கட்சி பூசல் நிலவுகிறது. துரைமுருகனின் மகன் வெற்றிபெறக்கூடாது என உதயநிதி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT