அந்தமான்- நிகோபார் தீவுகளில் செவ்வாய்கிழமை (ஜூன் 18) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், அந்தமான் தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அந்தமானில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 3.49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகுகளாக பதிவாகியுள்ளது.
அந்தமான்-நிகோபார் தீவுகளின் புவியியல் அமைப்பு, அடிக்கடி நிலக்கடி நிலநடுக்கம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்துள்ளது. அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். அங்கு நாளொன்றுக்கு 2 முதல் 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்படுவது இயல்பானது.
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அந்தமான்-நிகோபார் தீவுகளில் 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.