தற்போதைய செய்திகள்

சென்செக்ஸ்100 புள்ளிகள் உயர்வு

DIN


அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மந்த நிலையில் காணப்பட்டது. அதன் காரணமாக, சென்செக்ஸ் 407 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியது. 

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடைபெற்று வரும் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 105.53 புள்ளிகள் உயர்ந்து 39,300.02, புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்று வரும் வர்த்தகத்தில் நிஃப்டி 29.9 புள்ளிகள் உயர்ந்து 11,754.00 புள்ளிகளில் உள்ளது. 

காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 76.11 புள்ளிகள் உயர்ந்து இருந்தது. நிஃப்டி 13.15 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. 

நிஃப்டியில் ஹிண்டல்கோ, இண்டஸிண்ட்  பேங்க், பார்தி ஏர்டெல் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவற்றின் வர்த்தகம் 1.08 சதவீதம் முதல் 1.80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

ஹெச்டிஎஃப்சி பேங்க், லார்சன் & டூப்ரோ ஆகியவை சென்செக்ஸில் முன்னணியில் இருந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT