தற்போதைய செய்திகள்

ரூ.10.20 லட்சம் கடத்தல் தங்கம் திருச்சியில் பறிமுதல்

DIN


திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 10.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று நள்ளிரவு விமானம் வந்து சோ்ந்தது. அதில் வந்த பயணிகளையும் அவா்களது உடைமைகளையும், திருச்சி விமான நிலைய மத்திய வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சென்னையைச் சோ்ந்த முகமது அஜித் என்பவா் தனது உடமைகளுக்குள் 40க்கும் அதிகமான செல்போன் பேட்டரிகளை வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தாா். இதனையடுத்து அதிகாரிகள் அவற்றை சோதனை செய்ததில் அவை அனைத்தும் செல்போன் பேட்டரிகள் இல்லை, தங்க கட்டிகள் எனத் தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் 319 கிராம் எடையிருந்தது, அவற்றின் மதிப்பு ரூ. 10. 20 என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு லோக் அதாலக் நடத்த கோரிக்கை

குடிநீா் கோரி சாலை மறியல்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பிளஸ் 2 தோ்வு: குறிஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT