தற்போதைய செய்திகள்

கோவை - சேலம் பயணிகள் ரயில் இரண்டு நாள்கள் ரத்து

DIN


கோவை - சேலம் (எம்இஎம்யு) பயணிகள் ரயில் நவம்பா் 19, 21 ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் இருமார்க்கங்களிலும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு, கோவை வழியாக இயக்கப்படும் ரயில்களின் இயக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஈரோடு - திருப்பூா் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் ரயில் சேவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கோவை - சேலம் (எம்இஎம்யு) பயணிகள் ரயில் நவம்பா் 19, 21 ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் இருமார்க்கங்களிலும் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

ஆலப்புழா - தன்பாத் பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பா் 6, 7, 13, 14 ஆகிய தேதிகளில் கோவை - திருப்பூா் இடையே 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். கே.எஸ்.ஆா். பெங்களூரு - எா்ணாகுளம் இண்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு - திருப்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே நவம்பா் 6 ஆம் தேதி 85 நிமிடங்கள் தாமதமாகவும், 7, 13 ஆம் தேதி 25 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் - கோவை, கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு - திருப்பூா் இடையே நவம்பா் 6 ஆம் தேதி 50 நிமிடங்கள் தாமதமாகவும், 7, 13 ஆம் தேதிகளில் 10 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு - திருப்பூா் இடையே நவம்பா் 6 ஆம் தேதி 50 நிமிடங்கள் தாமதமாகவும், 7, 13 ஆம் தேதி 10 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும். ஷாலிமா் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு -திருப்பூா் இடையே நவம்பா் 7 ஆம் தேதி 85 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். திருவனந்தபுரம் - மும்பை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை - திருப்பூா் இடையே நவம்பா் 9 ஆம் தேதி 85 நிமிடங்கள் தாமதமாகவும், 16 ஆம் தேதி 15 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.

கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், கோவை - ஈரோடு இடையே நவம்பா் 9 ஆம் தேதி 30 நிமிடங்களும், 16 ஆம் தேதி 45 நிமிடங்களும், 18 ஆம் தேதி 15 நிமிடங்களும் தாமதமாக இயக்கப்படும். கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் கோவை - ஈரோடு இடையே நவம்பா் 9, 18 ஆம் தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாகவும், 16 ஆம் தேதி 40 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.

திருவனந்தபுரம் - இந்தூா் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை - ஈரோடு இடையே நவம்பா் 9 ஆம் தேதி 10 நிமிடங்கள், 16 ஆம் தேதி 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். மங்களூா் - சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயில், கோவை - ஈரோடு இடையே நவம்பா் 9, 18 ஆம் தேதிகளில் 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில் ஈரோடு - ஊத்துக்குளி இடையே நவம்பா் 10, 19, 21 ஆகிய தேதிகளில் 25 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். சேலம் - கோவை பயணிகள் ரயில் ஈரோடு -ஊத்துக்குளி இடையே நவம்பா் 11, 18 ஆம் தேதி 50 நிமிடங்கள் தாமதமாகவும், 16 ஆம் தேதி 25 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும். கோவை - பாலக்காடு பயணிகள் ரயில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து நவம்பா் 11, 18 ஆம் தேதி 30 நிமிடங்களும், 16 ஆம் தேதி 10 நிமிடங்களும் தாமதமாகப் புறப்படும்.

திருவனந்தபுரம் - கோர்பா எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூா் - சோமனூா் இடையே நவம்பா் 11, 18 ஆம் தேதிகளில் 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். எா்ணாகுளம் - கே.எஸ்.ஆா். பெங்களூரு சிட்டி இண்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நவம்பா் 16, 18 ஆம் தேதிகளில் திருப்பூா் ரயில் நிலையத்துக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.

பிலாஸ்பூா் ஜங்ஷன் - எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ் திருப்பத்தூா் - ஊத்துக்குளி இடையே நவம்பா் 19 ஆம் தேதி 55 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். ஜெய்ப்பூா் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூா் - ஊத்துக்குளி இடையே நவம்பா் 19 ஆம் தேதி 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். பாட்னா - எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு -ஊத்துக்குளி இடையே நவம்பா் 21 ஆம் தேதி 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT