தற்போதைய செய்திகள்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்று (நவ.7) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

DIN



சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்று (நவ.7) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  
 
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

ஏறுமுகமாக இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலையில் கடந்த ஒரு வாரமாக குறைந்தும், மாற்றமின்றியும் விற்பனையாகி வருகின்றன. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று (நவ.7) வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.75.45 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.69.50 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT