ஆட்சியமைப்பதில் இழுபறி: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரைத்துள்ள நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவின் சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்த நிலையில் ஆட்சி அமைக்க யாரும் முன்வராத காரணத்தினால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டிற்காக பிரேசில் செல்லும் முன் பிரதமர் மோடி இன்று பிற்பகலில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகவுள்ளதாக சிவசேனா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.