தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: சீமானுக்கு சம்மன் 

DIN

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி துத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. 

இந்த விசாரணை ஆணையத்தின் 15 ஆம் கட்ட விசாரணை நாளை தொடங்க உள்ளது. இந்த விசாரணையில் ஆஜராகுமாறு 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் நாளை ஆஜராக சீமானுக்கு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

மேலும் தூத்துக்குடி திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT