முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் சுற்றுச்சூழலை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னையில் சுற்றுச்சூழலை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:59 AM
பகிர்:


சென்னை: சென்னையில் சுற்றுச்சூழலை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கி மாதம் ஒருமுறை அறிக்கை அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், சென்னை மாவட்டத்திற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழு சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான விவரங்களை சேகரித்து மாதத்திற்கு ஒருமுறை தலைமை செயலருக்கும், பசுமைத் தீர்பாயத்திற்கும் அறிக்கை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.