ஒரே நாளில் இரண்டு முறை விலை குறைந்த தங்கம்
தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை விலை குறைந்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை விலை குறைந்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாகவே கடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது கடந்த புதன்கிழமை சவரன் 30 ஆயிரம் ரூபாயை கடந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலையானது இன்று ஏற்கனவே சவரனுக்கு 328 ரூபாய் குறைந்த நிலையில் தற்போது மேலும் 42 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் 29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 3 ஆயிரத்து 658 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
மேலும் தற்போது வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 51 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 1 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.