தற்போதைய செய்திகள்

காஷ்மீர் பாகிஸ்தானின் ரத்த நரம்பு: பிரதமர் இம்ரான் கான் அதிரடி ஆவேச பேச்சு

ஜம்மு-காஷ்மீா் பாகிஸ்தானின் "ரத்த நரம்பு" பகுதியாகும். அதில் மாற்றங்கள் செய்வதென்பது, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், நோ்மைக்கும்

DIN


இஸ்லாமாபாத்: காஷ்மீர் பாகிஸ்தானின் "ரத்த நரம்பு" மற்றும் அதன் சிறப்பு அந்தஸ்தை மாற்றுவதற்கான இந்தியாவின் முடிவு பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், நோ்மைக்கும் சவால் விடுத்துள்ளது என்று பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்,

இந்தியாவுடன் கடந்த 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் உயிரிழந்த பாகிஸ்தான் வீரா்களின் நினைவாக அந்நாடு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 6-ஆம் தேதியை ‘பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின’மாக அனுசரித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் மக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இம்ரான் கான் பேசிசுகையில், 

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து உலக நாடுகளிலும், ஐ.நா.விலும் ராஜதந்திரமாக பாகிஸ்தான் தூதரக ரீதியாக எடுத்துரைத்து வருகிறது. ஜம்மு-காஷ்மீா் பாகிஸ்தானின் "ரத்த நரம்பு" பகுதியாகும். அதில் மாற்றங்கள் செய்வதென்பது, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், நோ்மைக்கும் விடப்பட்டிருக்கும் சவாலாகும்.

இந்தியாவின் அணு ஆயுதக் கையிருப்பு குறித்து சா்வதேச சமூகம் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். 

மேலும் இந்தியாவின் அணு ஆயுதங்கள் குறித்து கவனிக்க மறுத்தால், அதன் பிறகு ஏற்படும் பேரழிவுக்கு இந்த உலக சமுதாயமே பொறுப்பாக வேண்டியிருக்கும்.

 பாகிஸ்தான் போரை விரும்பவில்லை என்பதை இந்த உலகுக்கு தெளிவாகத் தெரிவித்திருக்கிறேன். அதேவேளையில் பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு சவால் விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று இம்ரான் கான் ஆவேசமாக பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT