தற்போதைய செய்திகள்

இஸ்ரோவின் முயற்சி உத்வேகம் அளிக்கிறது: நாஸா வாழ்த்து

நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கும் இஸ்ரோவின் முயற்சி உத்வேகம் அளித்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா தனது வாழ்த்து

DIN

நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கும் இஸ்ரோவின் முயற்சி உத்வேகம் அளித்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளது. 

நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நேற்று சனிக்கிழமை அதிகாலையில் நிலவில் தரையிறக்கத் திட்டமிடப்பட்டது. எனினும், உத்தேசித்தபடி லேண்டர் தரையிறங்காதது மட்டுமின்றி, தரைக் கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பையும் அது இழந்தது. இது இஸ்ரோவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது

இந்நிலையில், விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,  நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கும் இஸ்ரோவின் முயற்சிக்கு பாராட்டுகள். உங்களின் முயற்சி எங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. எதிர்காலத்தில் சூரிய மண்டல ஆராய்ச்சி திட்டங்களில் ஒன்றாக செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT