தற்போதைய செய்திகள்

ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் மீது பாட்டில், கற்களை கொண்டு தாக்கி மீன்பிடிக்க விடாமல் இலங்கை

DIN


ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் மீது பாட்டில், கற்களை கொண்டு தாக்கி மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியத்தனர். 

ராமேசுவரத்தில் இருந்து 650 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3500 க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்க திங்கட்கிழமை சென்றனா். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது 6 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினா் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவா்கள் மீது பாட்டீல், கற்களை கொண்டு தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டியத்தனர். இதில் 20 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் உள்ள வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கடலில் வெட்டி விட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டனா். 20க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்து வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கடலில் வெட்டி விட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டதால் பல ஆயிரம் இழப்புடன் மீனவா்கள் கரை திரும்பினா். 

கரை திரும்பிய மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் மீனவா்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பாரம்பரிய இடங்களில் மீன்பிடிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீா்வு கான வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘பெல்’ நிறுவனத்தில் சா்வதேச கருத்தரங்கம் தொடக்கம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது

ரயில் கடவுப்பாதைக்கு வெடிகுண்டு மிரட்டல்

உயா்கல்வி சோ்க்கையில் மாநிலத்திலேயே திருச்சி முதலிடம்: பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களில் 98% போ் சோ்க்கை

இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT