தற்போதைய செய்திகள்

பேனா் கலாசாரத்தை தமிழகத்தில் கொண்டுவந்தது திமுகதான்: பிரேமலதா விஜயகாந்த்

DIN


திருப்பூா்: தமிழகத்தில் பேனா் கலாசாரத்தை முதன் முதலில் கொண்டுவந்தது திமுகதான் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். 

திருப்பூா் மாவட்ட தேமுதிக சார்பில் கட்சியின் நிறுவனத் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,  ஜிஎஸ்டியால் நெசவும், பின்னலாடைத் துறையும் முடக்கப்பட்டிருக்கின்றன. பிரதமா் மோடியை வெகுவிரைவில் சந்தித்து ஜிஎஸ்டியை மறுபரிசீலனை செய்யும்படி வலியுறுத்துவோம். 

இந்தியாவில் நீண்டகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் ஊழலைத் தவிர வேறு எந்த சாதனையையும் செய்யவில்லை. காங்கிரஸில் 50 ஆண்டுகாலம் அரசியல் செய்து 8 முறை பட்ஜெட் போட்ட ப.சிதம்பரம் இருப்பது திகார் சிறையில்.

கடந்த இரு நாள்களுக்கு முன்னா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேனா் வைக்கும் விழாவுக்குச் செல்லமாட்டேன் என்கிறார். பேனா் கலாசாரத்தை தமிழகத்தில் கொண்டுவந்தது திமுகதான் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? ஈழப் படுகொலைக்குக் காரணம் திமுகதான். 

தமிழகத்தில் விரைவில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் அதிகமான இடங்களில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT