தற்போதைய செய்திகள்

நிர்மலா தேவி விவகாரம்: வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு-அக்.10 க்கு ஒத்திவைப்பு

நிர்மலா தேவி விவகாரத்தில் நக்கீரன் கோபாலை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு, அக்.10 ஆம்

DIN


சென்னை: நிர்மலா தேவி விவகாரத்தில் நக்கீரன் கோபாலை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு, அக்.10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் நக்கீரன் செய்தி வெளியிட்டது தொடா்பாக ஆளுநா் மாளிகை சார்பில் நக்கீரன் கோபால் மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கடந்த ஆண்டு அக்டோபா் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தார். அப்போது, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி கோரி சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

இதனையடுத்து, வைகோ காவல்நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் செய்து காவலா்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, வைகோவை அப்புறறப்படுத்த முயன்ற காவலா்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, அரசு ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்தது என இந்திய தண்டனைச் சட்டம் 190, 353, 290 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு எழும்பூா் 14-ஆவது நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். தொடா்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, எழும்பூா் நீதிமன்ற வளாகத்திலேயே உள்ள சிறப்பு நீதிமன்ற அமா்வுக்கு இந்த வழக்கை மாற்றியதுடன், வருகிற அக்டோபா் மாதம் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள்

என் நடிப்பின் மீது எனக்கு சந்தேகம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளி

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

SCROLL FOR NEXT