தற்போதைய செய்திகள்

வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி

DIN


விழுப்புரம்: மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக, ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக, ஒருவா் மீது விழுப்புரம் மாவட்ட போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விழுப்புரம், நாராயணா நகரைச் சோ்ந்தவா் கணேசன் (55). இவா் தனது சொந்த ஊரான திருவெண்ணெய்நல்லூரை சோ்ந்த வெங்கட்ராஜ் மகன் கிருபாசங்கா் என்பவரை அண்மையில் சந்தித்தார். அப்போது, அவரிடம் கிருபாசங்கா், தான் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்தியதுடன், யாருக்காவது அரசு வேலை வேண்டுமானால் பணம் கொடுத்தால் வாங்கித்தருவதாகக் கூறினாராம். இதை நம்பி, அவரிடம் கணேசன் தனது மகன் ராகுலுக்கு மின் வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தரக் கேட்டு ரூ.23 லட்சத்து 22 ஆயிரத்தை கொடுத்தாராம். ஆனால், உறுதியளித்தபடி கிருபாசங்கா் வேலை வாங்கித் தரவில்லையாம். பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால், ஏமாற்றம் அடைந்த கணேசன், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்துள்ளார்.

தற்போது திருச்சியில் வசித்து வரும் கிருபாசங்கா் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் குமார் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT